எம்ஜிஆர்-ன் சிகிச்சை ஆவணங்களை வழங்க அப்போலோவுக்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு

எம்ஜிஆர்-ன் சிகிச்சை ஆவணங்களை வழங்க அப்போலோவுக்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
எம்ஜிஆர்-ன் சிகிச்சை ஆவணங்களை வழங்க அப்போலோவுக்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு
Published on

சென்னை

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. 22.9.2016 அன்று இரவு ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை அளித்த மருத்துவர்களில் ஒருவரான இருதய நோய் தடுப்பு சிறப்பு மருத்துவர் சத்தியமூர்த்தி நேற்று ஆணையத்தில் ஆஜராகி சாட்சி அளித்தார்.

இந்த நிலையில் எம்ஜிஆர்-ன் சிகிச்சை ஆவணங்களை வழங்க அப்போலோவுக்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.எம்ஜிஆர்-ஐ வெளிநாடு அழைத்துச் செல்ல எதனடிப்படையில் முடிவெடுக்கப்பட்டது எனவும் ஆணையம் கேள்வி எழுப்பி உள்ளது.

34 ஆண்டுகளுக்கு பிறகு எம்ஜிஆர்-ன் சிகிச்சை ஆவணங்களை வழங்க கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. எம்.ஜி.ஆரை வெளிநாடு அழைத்து செல்ல எதன் மூலம் முடிவெடுக்கப்பட்டது என கேள்வி எழுப்பப்பட்டது.

எம்.ஜிஆர் சிகிச்சை ஆவணங்களை 23 ந்தேதிக்குள் ஒப்படைக்க கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.

1984 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5-ந்தேதி இரவு எம்.ஜி.ஆர் அமெரிக்கா அழைத்து செல்லப்பட்டார். இரவு 10.45 மணிக்கு விமானம் அமெரிக்காவுக்குப் புறப்பட்டது.

எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள், அமைச்சர் ஹண்டே, முதல்_அமைச்சரின் தனிச்செயலாளர் பரமசிவம் மற்றும் டாக்டர்கள், நர்சுகள், உதவியாளர்கள் உள்பட மொத்தம் 21 பேர் அந்த விமானத்தில் சென்றார்கள். வழியில் பெட்ரோல் நிரப்புவதற்காக பம்பாய், லண்டன் ஆகிய இடங்களில் விமானம் தரை இறக்கப்பட்டது. பின்னர் இந்திய நேரப்படி 6-ந்தேதி இரவு 10.22 மணிக்கு விமானம் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தை அடைந்தது. புரூக்ளின் ஆஸ்பத்திரியில் அளிக்கப்பட்ட சிகிச்சையின் மூலம் எம்.ஜி.ஆரின் உடல் நிலையில் சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com