

சென்னை,
வருங்கால வைப்பு நிதி கமிஷனர்-1 நிஷா ஒவி வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
'நிதி ஆப்கே நிகத்' வைப்பு நிதி உங்கள் அருகில் என்ற முகாம் சென்னை, வேலூர், புதுச்சேரி உள்பட 10 இடங்களில் நாளை (புதன்கி ழமை) காலை 9 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடக்கிறது. சென்னை தியாகராயநகரில் உள்ள ஓட்டல் ரெசிடென்சி, அண்ணாநகர் மேற்கில் உள்ள எஸ்.பி.ஐ.ஓ.ஏ. கல்வி அறக்கட்டளை, கும்மிடிப்பூண்டி சிப் காட் தொழிற்பேட்டையில் உள்ள மிட்சுபா இந்தியா பிரைவேட் நிறுவனம், காஞ்சீபுரம் பெரியார் நகரில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனம், தாம்பரம் மெப்ஸ்-ல் உள்ள மெப்ஸ் மாநாட்டு அரங்கத்தில் முகாம் நடைபெற உள்ளது.
முகாமில், வருங்கால வைப்பு நிதியில் உறுப்பினர்களாக உள்ளவர்கள், முதலாளிகளிடம் இருந்து பெறப்படும் குறைகளை நிவர்த்தி செய்தல், தொழிலாளர்களுக்கு ஆன்லைன் சேவைகள் பற்றி விளக்குதல், சீர்திருத்தங் கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் வாழ்க்கை சான்றிதழ்களை சமர்ப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள்நடைபெறும். முகாமில் பங்கேற்க
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeVqvdARtdgVj11FgH4aP1DICCW08OAFGA-k2alOMdDNTxwMQ/viewform?usp=sharing-amp;ouid=106859029795621361670 என்ற படிவத்தில் விவரத்தை நிரப்பி அனுப்பவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.