

சென்னை,
தமிழகத்துக்கு தேவையான அரிசி, கோதுமை, சர்க்கரை போன்ற உணவு பொருட்களை எங்கள் அமைச்சகம் வழங்குகிறது. மண்எண்ணெயை பெட்ரோலியம் அமைச்சகம் வழங்குகிறது. மேற்கு வங்காளம், தமிழகம் போன்ற மாநிலங்களில் அரிசியை அதிகளவு விரும்புகின்றனர். எனவே அந்த மாநிலங்கள் அரிசியையே அதிகமாக கேட்கின்றன. என்றாலும், தேவைக்கேற்ப அரிசியை வழங்குகிறோம்.
கோதுமையை கேட்டால் வழங்க தயாராக உள்ளோம். தமிழகத்தில் புழுங்கல் அரிசியை கேட்டால், பச்சரிசியை அதிகளவில் திணிப்பதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. தமிழகம் கேட்கும் அரிசி, கோதுமையை தேவைக்கேற்ப வழங்குகிறோம்.
அரிசி உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலம் தமிழகம். இங்கு 70 சதவீதம் புழுங்கல் அரிசியும், 30 சதவீதம் பச்சரிசியும் வழங்குகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.