அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி எந்திரம் மூலம் டிக்கெட் வழங்க ஏற்பாடு - அமைச்சர் சிவசங்கர் தகவல்

அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி எந்திரம் மூலம் டிக்கெட் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி எந்திரம் மூலம் டிக்கெட் வழங்க ஏற்பாடு - அமைச்சர் சிவசங்கர் தகவல்
Published on

எழும்பூர்,

சென்னையில்  போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

பெண்களுக்கு இலவசப் பயணம் அறிவித்த பிறகு, பெண்களின் பயணம் சென்னையில் 69 சதவீதம் அளவுக்கு பெண்களின் போக்குவரத்து அதிகரித்துள்ளது.

பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம் இந்தியாவில் யாரும் கொண்டு வராத சிறப்பான திட்டம் ஆகும். இலவச பேருந்து பயண திட்டம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு லாபம் தரக்கூடிய ஒரு செயல்பாடாக உள்ளது.

அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி இயந்திரம் மூலம் டிக்கெட் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அனைத்து பேருந்துகளிலும் கேமரா வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 500 பேருந்துகளில் கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது. பழுதடைந்த பேருந்துகளை சரி செய்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com