

மங்களமேடு:
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்த வாலிகண்டபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா மற்றும் சைக்கிள் நிறுத்தம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். மாணவர்களுக்கு சைக்கிள்களை பிரபாகரன் எம்.எல்.ஏ. வழங்கி பேசினார். இதில் 73 சைக்கிள்கள் வழங்கப்பட்டது. விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் கலைச்செல்வி, ஒன்றியக்குழு தலைவர் ராமலிங்கம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மாதேவி ஜெயபால், ஊராட்சி மன்ற தலைவர் கலியம்மாள் அய்யாக்கண்ணு, ஒன்றிய குழு உறுப்பினர் சாவித்திரி மகாராஜன், மாவட்ட தி.மு.க. பொருளாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் ரஞ்சன்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 33 விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டது. இதில் மாணவர்கள், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.