கொடைக்கானலுக்கு சுற்றுலா வருவதை தவிர்க்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

வெள்ளப்பெருக்கு அபாயம் உள்ள பகுதிகளுக்கு தேவையற்ற பயணங்களை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
Published on: 

சென்னை,

தமிழகத்தில் தற்பொழுது வடகிழக்கு பருவமழை தீவிரமாக தொடங்கி உள்ளது. இதன் காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் கொடைக்கானல் மலைக் கிராமங்களில் கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியாகக் கனமழையும் மிதமான மழையும் பெய்து வருகிறது. மலைப் பகுதிகளில் பெய்து வரும் இந்தத் தொடர் மழையினால், அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிவதுடன், காட்டாறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக, பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு திண்டுக்கல் மாவட்ட காவல்துறை மிக முக்கியமான அவசரப் பயண எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

இந்நிலையில், கனமழையால் மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலை நிலவுகிறது. கொடைக்கானல், தாண்டிக்குடி மலைப்பகுதிகளுக்குச் சுற்றுலா வருவதை தவிர்க்க வேண்டும். மலைப்பாதைகளில் பயணிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

வெள்ளப்பெருக்கு அபாயம் உள்ள பகுதிகளுக்கு தேவையற்ற பயணங்களை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com