ரேஷன் கடை ஊழியரின் திருட்டு வேலை - பொதுமக்கள் குற்றச்சாட்டு

பொருட்களின் அளவை குறைத்து அதற்கு ஏற்றவாறு கல்லை வைப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
ரேஷன் கடையில் திருட்டு வேலை
Published on: 

திருவாரூர்,

ரேஷன் கடை ஊழியர் திருட்டு வேலையில் ஈடுபடுவதால் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே ஆலங்காடு கிராமத்தில் உள்ள நியாய விலைக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் அளவை குறைத்து எடை மெஷினில் அதற்கு ஏற்றவாறு எடைக் கல்லை வைத்து பொருட்கள் வழங்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது :-

28 கிலோ அரிசி வாங்கி வெளிக்கடைகளில் அளவிட்டால் 18 கிலோ மட்டுமே இருக்கின்றது. இது குறித்து பல முறை ஊழியர்களிடம் கூறியும் எந்த வித மாற்றமும் இல்லை. இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com