திருட்டை தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

நம்பேடு கிராமத்தில் திருட்டை தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திருட்டை தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
Published on

சேத்துப்பட்டு

சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி, சப்- இன்ஸ்பெக்டர் வரதராஜன் மற்றும் போலீசார், நம்பேடு கிராமத்தில் திருட்டை ஒழிப்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடத்தினர்.

கூட்டத்தில் பேசிய இன்ஸ்பெக்டர் தமிழரசி இரவு நேரங்களில் கதவு, ஜன்னல்கள பூட்டி வைக்க வேண்டும். காற்றுக்காக கதவை திறந்து வைத்து விட்டு தூங்கக்கூடாது. வாகனங்களை வீட்டுக்குள் நிறுத்தி பூட்டி வைக்க வேண்டும்.

வெளியில் செல்லும்போது நகைகளை அதிகமாக அணிந்து வரக்கூடாது, பொதுமக்கள் கூடும் இடத்தில் பணத்தை எண்ணக்கூடாது.

புதிதாக யாராவது தெருக்களில் வந்தால் அவர்கள் யார் என்று கேட்க வேண்டும்.

சந்தேகம் ஏற்பட்டால் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வெளியூர் செல்லும்போது போலீஸ் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com