பைக்கில் வந்து ஆடு திருட முயன்ற தந்தை-மகனை மடக்கி பிடித்த பொதுமக்கள்

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே உள்ள கூட்டாம்புளி பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு ஆட்டை, அந்த வழியாக பைக்கில் வந்த 2 பேர் திருடி தங்கள் பைக்கில் ஏற்றிக் கொண்டு தப்ப முயன்றனர்.
பைக்கில் வந்து ஆடு திருட முயன்ற தந்தை-மகனை மடக்கி பிடித்த பொதுமக்கள்
Published on: 

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே உள்ள கூட்டாம்புளி பகுதியில் பட்டப்பகலில் பைக்கில் வந்து ஆடு திருட முயன்ற தந்தை-மகனை பொதுமக்கள் கையும் களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

ஆடு திருட முயன்ற தந்தை-மகன்

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே உள்ள கூட்டாம்புளி பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளில் ஒரு ஆட்டை, அந்த வழியாக பைக்கில் வந்த 2 பேர் திருடி தங்கள் பைக்கில் ஏற்றிக் கொண்டு, தப்ப முயன்றுள்ளனர். இதை தற்செயலாக கவனித்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக சுதாரித்து செயல்பட்டு, ஆட்டுடன் தப்பிக்க முயன்ற 2 பேரையும் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். அதைத் தொடர்ந்து பிடிபட்ட 2 பேரையும் பொதுமக்கள் புதுக்கோட்டை காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தந்தை-மகன் கைது

இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிடிபட்ட 2 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் தூத்துக்குடி கணேசன் காலனியைச் சேர்ந்த கணேசன் மகன் ஆரோக்கியஅந்தோணி (வயது 43) மற்றும் அவரது மகன் அந்தோணிமுத்து(20) என்பது தெரியவந்தது. போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

மேலும் பொதுமக்கள் தாக்கியதில் காயம் ஏற்பட்டுள்ளதால் 2 பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீஸ் பாதுகாப்புடன் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பட்டப்பகலில் ஆடு திருட முயன்ற தந்தை-மகன் பிடிபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com