சாயம் பூசி நாட்டுக்கோழி முட்டை என ஏமாற்றும் வியாபாரிகள்

சாயம் பூசி நாட்டுக்கோழி முட்டை என வியாபாரிகள் ஏமாற்றுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
சாயம் பூசி நாட்டுக்கோழி முட்டை என ஏமாற்றும் வியாபாரிகள்
Published on

பரமக்குடி, 

நாட்டுக்கோழி முட்டை உடலுக்கு மிகவும் நல்லது என்பதால் விளையாட்டு வீரர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் தினமும் ஒரு நாட்டுக்கோழி முட்டை சாப்பிட்டு வருகிறார்கள். மேலும் எலும்புகளும் வலுவடைகிறது. குறிப்பாக நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு இது சிறந்த உணவாகும். 1 நாட்டுக்கோழி முட்டை ரூ.22-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதை பயன்படுத்தி சில வியாபாரிகளும், தெருக்களில் கூடையில் கொண்டு வந்து முட்டை விற்பனை செய்பவர்களும் பிராய்லர் கோழி முட்டையில் சாயத்தை பூசி நாட்டுக்கோழி முட்டை என ஏமாற்றி விற்பனை செய்வதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.அதை தண்ணீரில் அவிக்கும் போது சாயம் வெளுத்து முட்டை வெள்ளை நிறத்தில் மாறிவிடுகிறது. இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com