கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதலுக்கான பொதுகலந்தாய்வு: அமைச்சர் அறிவிப்பு

அரசு கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதலுக்கான பொதுகலந்தாய்வு நடைபெறும் என்று அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார்.
கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதலுக்கான பொதுகலந்தாய்வு: அமைச்சர் அறிவிப்பு
Published on

சென்னை,

உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு கல்லூரிக் கல்வித் துறையின்கீழ் இயங்கும் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறையின்கீழ் இயங்கி வரும் அரசு பொறியியற் கல்லூரிகள், அரசினர் பாலிடெக்னிக் கல்லூரிகள், அரசினர் சிறப்புப் பயிலகங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் ஆசிரியர்களிடமிருந்து பணியிட மாறுதலுக்கான பொதுகலந்தாய்வு நடைபெற வேண்டுமென அரசுக்குக் கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன.

ஆசிரியர்களின் இந்தக் கோரிக்கைகளைப் பரிவுடன் ஏற்று, நடப்பு ஆண்டில் மேற்கண்ட துறைகளின்கீழ் பணிபுரியும் ஆசிரியர்களுக்குப் பணியிட மாறுதலுக்கான பொதுகலந்தாய்வினை வெளிப்படைத் தன்மையுடன் இணைய வழியின் வாயிலாக மேற்கொள்ளலாம் என அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, கல்லூரிக் கல்வித் துறையின்கீழ் இயங்கும் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறையின்கீழ் இயங்கும் அரசினர் பொறியியற் கல்லூரிகள், அரசினர் பாலிடெக்னிக் கல்லூரிகள், அரசினர் சிறப்புப் பயிலகங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் 2024-25-ம் கல்வி ஆண்டிற்கான பணியிட மாறுதலுக்கான பொதுகலந்தாய்வினை உரிய நெறிமுறைகளைப் பின்பற்றி 25.11.2024-க்குள்ளாக வெளிப்படைத் தன்மையுடன் இணையவழியின் வாயிலாக மேற்கொள்ளுமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுரை வழங்கியுள்ளார். அதற்கிணங்க இணையவழியாகப் பெறப்படுகின்ற ஆசிரியர்களின் மாறுதல் விண்ணப்பங்கள் உரிய விதிகளின்படி பரிசீலனை செய்யப்பட்டு ஆணைகள் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com