

வடபழனியில் நடைபெறும் காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாமை அமைச்சர் அருண்ராஜ் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து அவர் வீடு வீடாக சென்று டெங்கு தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார்.
தமிழ்நாட்டில் ஜன.1 முதல் நேற்று வரை இந்தாண்டில் மட்டும் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 10 பேர் உயிரிழந்துள்ளனர். பருவமழை தொடங்க உள்ளதால் அரசின் நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.
கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்று வரை தமிழகத்தில் மொத்தம் 21,655 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க முதல்-அமைச்சர் விஜய் அறிவுறுத்தி உள்ளார். தமிழகத்தில் ஜனவரி 1ம் தேதி முதல் நேற்று வரை இந்தாண்டில் மட்டும் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 10 பேர் உயிரிழந்தனர். பருவமழை துவங்க உள்ளதால் அரசின் நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.
வீட்டு மொட்டை மாடியில் தண்ணீர் தேங்காமல் இருப்பதை பொதுமக்கள் உறுதி செய்ய வேண்டும். டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்தால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். நீண்ட காலமாக சிகிச்சையில் இருக்கும் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு கொண்டு தான் இருக்கிறது. தற்போது உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை வெளியிட சொல்கிறோம்.
இவ்வாறு அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.