அலுவலகத்துக்கு வராதகிராம நிர்வாக அலுவலரை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்கண்டாச்சிபுரம் அருகே பரபரப்பு

கண்டாச்சிபுரம் அருகே அலுவலகத்துக்கு வராத கிராம நிர்வாக அலுவலரை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அலுவலகத்துக்கு வராதகிராம நிர்வாக அலுவலரை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்கண்டாச்சிபுரம் அருகே பரபரப்பு
Published on

கண்டாச்சிபுரம்,

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகா ஒட்டம்பட்டு கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு அதே கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று கூடி திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கிராம நிர்வாக அலுவலர் தேசிங்கு என்பவர் அலுவலகத்திற்கு வராதை கண்டித்தும், முதியோர் உதவித்தொகை பெறுவதற்கு லஞ்சம் கேட்பதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த அரகண்டநல்லூர் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினார்கள். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டனர்.

பின்னர் கண்டாச்சிபுரம் தாசில்தார் கற்பகம் அங்கு வந்து கிராம நிர்வாக அலுவலர் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com