

அரூர்:
அரூர் அருகே நரிப்பள்ளி மின்வாரிய பிரிவு அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணிபுரிந்த எஸ்.நீதி பணி இடமாற்றம் செய்யப்பட்டார். இதை கண்டித்தும், மீண்டும் அவரை நரிப்பள்ளி பிரிவு அலுவலகத்திலேயே பணி அமர்த்தக்கோரியும், கிராம பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலாகள் நேற்று மின்வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் உதவி பொறியாளரின் பணி இடமாறுதலை ரத்து செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.