பொதுமக்கள் தர்ணா

மல்லிகுந்தத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
பொதுமக்கள் தர்ணா
Published on

மேச்சேரி:

மல்லிகுந்தம் ஊராட்சியில் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதிக்கு அடிப்படை தேவைகளுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டும் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், ஊராட்சியில் 2019-ம் ஆண்டு முதல் இதுவரை செய்யப்பட்ட பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட கோரியும், டாக்டர் அம்பேத்கர் சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் மல்லிகுந்தத்தில் தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு வக்கீல் முத்துசாமி தலைமை தாங்கினார். செல்வராஜ் வரவேற்றார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com