பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம்

நெல்லை மாவட்டத்தில் பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம் நாளை நடக்கிறது.
பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம்
Published on

நெல்லை மாவட்டத்தில் பொது வினியோக திட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் நாளை (சனிக்கிழமை) நடத்தப்பட உள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து தாசில்தார் அலுவலகத்திலும் நடக்கும் இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு, ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் செய்தல், முகவரி மாற்றம், புதிய ரேஷன் கார்டு அல்லது நகல் அட்டை கோரி விண்ணப்பிக்கலாம். அதேபோல் செல்போன் எண் பதிவு செய்தல், அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்து புகார் தெரிவிக்கலாம். இந்த முகாம் மற்றும் பொதுவினியோக திட்ட செயல்பாடுகள் குறித்த புகார்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக பொது வினியோக திட்ட கட்டுப்பாட்டு அறை எண் 9342471314-ஐ தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com