10 தாலுகா அலுவலகங்களில் பொது வினியோக திட்ட குறைதீர் முகாம் நாளை நடக்கிறது

10 தாலுகா அலுவலகங்களில் பொது வினியோக திட்ட குறைதீர் முகாம் நாளை(சனிக்கிழமை) நடக்கிறது என கலெக்டா தொவித்துள்ளா.
10 தாலுகா அலுவலகங்களில் பொது வினியோக திட்ட குறைதீர் முகாம் நாளை நடக்கிறது
Published on

கடலூர் மாவட்டத்தில், 10 தாலுகா அலுவலகங்களிலும் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை பொதுவினியோகத்திட்ட குறைதீர் முகாம் நடக்கிறது. அதாவது, கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய தாலுகா அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடக்கிறது. இந்த முகாமில் குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை, கைப்பேசி எண் பதிவு, மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். மேற்படி மனுக்களின் மீது உடன் தீர்வு காணப்படும்.

பொது வினியோகத்திட்டத்தின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப்பொருட்களின் தரம் குறித்த புகார்களையும் அளிக்கலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com