பொது வினியோக திட்ட சிறப்பு முகாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது வினியோக திட்ட சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.
பொது வினியோக திட்ட சிறப்பு முகாம்
Published on

பொது வினியோக திட்டம் சிறப்பாக நடைபெற ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அந்தந்த தாலுகா அலுவலக வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் மின்னணு ரேஷன் அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தங்கள், உறுப்பினர் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல், செல்போன் எண் மாற்றம், புதிய ரேஷன் அட்டை மற்றும் நகல் அட்டை கோருதல் போன்ற குறைகள் சரிசெய்து வழங்கப்பட உள்ளது. மேலும் மின்னணு ரேஷன் அட்டைகளில் உள்ள தவறான குடும்பத்தலைவரின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பின் புகைப்படம் பதிவேற்றம் செய்து திருத்தி தரப்படும். இது தவிர பொது வினியோகத் திட்டம் தொடர்பான குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் பயன்பெறலாம்.

மேலும் பொதுமக்கள் குறைகள் இருப்பின் முகாமில் மனு கொடுத்து பயன் பெறலாம்.

இந்த தகவலை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com