பொது வினியோகத்திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம்

பொது வினியோகத்திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் நடைபெற்றது.
பொது வினியோகத்திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம்
Published on

இலுப்பூர் தாலுகா அலுவலகத்தில் பொது வினியோகத்திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் நடந்தது. முகாமுக்கு வட்ட வழங்கல் அலுவலர் துரைராஜ் தலைமை தாங்கினார். முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் குடும்ப அட்டைக்கு மனு செய்தல், செல்போன் எண் பதிவு செய்தல், குடும்பத்தலைவர் புகைப்படம் மாற்றம் செய்தல் வேண்டி பல்வேறு மனுக்கள் பெறப்பட்டு உடனடி தீர்வு காணப்பட்டது. சில மனுக்கள் மேல் நடவடிக்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் வருவாய் துறையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com