காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்வு முகாம்; போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமையில் நடந்தது

காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்வு முகாம் போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமையில் நடந்தது.
காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்வு முகாம்; போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமையில் நடந்தது
Published on

கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஜவகர்லால், மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் ஏற்கனவே உயர் அதிகாரிகளிடம் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்களில் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களில் முறையான தீர்வு காணமுடியாத 75 மனுக்களில் 68 மனுக்கள் மீது உரிய முறையில் விசாரணை நடத்தப்பட்டு, தீர்வு காணப்பட்டது. மேலும் நிலுவையில் உள்ள 7 மனுதாரர்களின் குறைகளை கேட்டறிந்து, அதற்கு தீர்வு காண ஏதுவாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுதவிர நேற்று நடந்த முகாமில் 30 பேர் பல்வேறு குறைகள் தொடர்பாக மனு அளித்தனர். பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி தீர்வு காண உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். மேலும் அவர், போலீஸ் நிலையங்களில் பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனுக்கள் மீது உடனுக்குடன் விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளை அறிவுறுத்தினார். இந்த முகாமில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ரமேஷ், மகேஷ், மனோஜ்குமார், மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com