திருவள்ளூரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - கலெக்டர் தலைமையில் நடந்தது

திருவள்ளூரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடந்தது.
திருவள்ளூரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - கலெக்டர் தலைமையில் நடந்தது
Published on

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் பொதுமக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த திரளான பொதுமக்கள், நிலப்பிரச்சினை, வேலைவாய்ப்பு, வீட்டுமனை பட்டா, பசுமை வீடு, அடிப்படை வசதிகள், தொகுப்பு வீடுகள் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 294 மனுக்களை அளித்தனர். அந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதைத் தொடர்ந்து கலெக்டர் மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபெற்ற சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

கூட்டத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஜோதி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் கலைச்செல்வி, உதவி ஆணையர் பரமேஸ்வரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com