நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது
நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
Published on

நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

குறைதீர்க்கும் கூட்டம்

தமிழக அரசு உத்தரவின்பேரில், அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்கள், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகங்களில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று காலையில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் தலைமை தாங்கினார். துணை போலீஸ் கமிஷனர்கள் சீனிவாசன் (கிழக்கு), சரவணகுமார் (மேற்கு), அனிதா (தலைமையிடம்) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கினர். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு கமிஷனர் உத்தரவிட்டார்.

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம்

அதேபோல் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜூ, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் 22 கோரிக்கை மனுக்களை வழங்கினர். அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com