திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Published on

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று பொதுமக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த திரளான பொதுமக்கள் வேலை வாய்ப்பு, கடன் உதவி, பசுமை வீடு, அடிப்படை வசதிகள் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 338 மனுக்களை அளித்தனர். அந்த மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

போக்குவரத்து வசதி

பின்னர் கலெக்டர் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பாக போக்குவரத்து வசதி இல்லாத இடத்தில் வசிக்கும் பழங்குடியின மாணவர்கள் கல்வி பயில ஏதுவாக அவர்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தரும் வகையில் 6 பள்ளிகளில் பயிலும் 73 பழங்குடியின மாணவர்களுக்கு மாதம் தலா ரூ.52,000 வழங்கும் விதமாக இந்த மாதத்திற்கான காசோலையை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினார்.

திருமண உதவி தொகை

பின்னர் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்திருக்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளின் குறைகளை கேட்டு அவரிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதையடுத்து மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் 7 மாற்றத்திறனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 75 ஆயிரத்திற்கான திருமண உதவி தொகைகளை பெறுவதற்கான ஆணைகளையும், மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டப்படிப்பு முடித்து வழக்கறிஞராக பதிவு செய்ய ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.50,000 பெறுவதற்கான ஆணைகளையும் வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com