அரியலூர் நகரில் பொது சுகாதார வளாகம் சீரமைப்பு


அரியலூர் நகரில் பொது சுகாதார வளாகம் சீரமைப்பு
x

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக அரியலூர் நகரில் உள்ள பொது சுகாதார வளாகம் சீரமைக்கப்பட்டது.

அரியலூர்

அரியலூர் வ.உ.சி. தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் அடிப்படை தேவைக்காக அப்பகுதியில் உள்ள அய்யப்பன் ஏரி அருகே பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக அவை பொதுமக்கள் பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது.

மேலும், அந்த சுகாதார வளாக கட்டிடத்தை சுற்றிலும் புதர்கள் மண்டியும், சுவர்களில் விரிசல் விழுந்தும் காணப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அவதியடைந்து வந்தனர். இதுகுறித்து 'தினத்தந்தி' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.

இதனைதொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் உத்தரவின்பேரில் பொது சுகாதார வளாகத்தை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. அதன்படி, கட்டிடத்தை சுற்றியுள்ள புதர்கள் மற்றும் கருவேல மரங்கள் அகற்றப்பட்டன. மேலும் விரிசல்கள் சரிசெய்யப்பட்டு வர்ணம் பூசும் பணி நடைபெற்றது. மேலும் இந்த பொதுசுகாதார வளாகம் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், இதுதொடர்பாக செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

1 More update

Next Story