பதிவு எல்லைகள் சீரமைத்தல் தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் கடலூரில் நாளை நடக்கிறது

பதிவு எல்லைகள் சீரமைத்தல் தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் கடலூரில் நாளை நடக்கிறது.
பதிவு எல்லைகள் சீரமைத்தல் தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் கடலூரில் நாளை நடக்கிறது
Published on

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசாணைப்படி (நிலை) பதிவு கிராமங்கள் அனைத்தும் அருகில் உள்ள சார் பதிவாளர் அலுவலக எல்லைக்குள் வரும் வகையிலும், இணையவழி தானியங்கி பட்டா மாறுதல் பணிக்காக பதிவு கிராமங்கள் வருவாய் கிராமங்களுடன் பொருந்தும் வகையிலும் மாற்றியமைக்கப்பட வேண்டும். அதனால் ஒரு வருவாய் வட்டத்திற்குட்பட்ட கிராமங்களை அதே வருவாய் வட்டத்தின் எல்லைக்குள் அமைந்துள்ள சார் பதிவகங்களுடன் இணைக்கும் பொருட்டு கடலூர் வருவாய் மாவட்டத்திற்குட்பட்ட கடலூர், சிதம்பரம் மற்றும் விருத்தாசலம் ஆகிய பதிவு மாவட்டங்களின் எல்லைகள் மற்றும் சார் பதிவாளர் அலுவலக எல்லைகளை சீரமைத்தல் வேண்டும்.

இதுதொடர்பான விவரங்கள் கடலூர் பதிவு மண்டல துணைப்பதிவுத்துறை தலைவர் அலுவலகம், கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய மாவட்ட பதிவாளர் அலுவலகங்கள் மற்றும் தொடர்புடைய சார் பதிவாளர் அலுவலகங்களின் விளம்பர பலகையில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் பதிவு எல்லைகள் சீரமைத்தல் தொடர்பாக, தொடர்புடைய மாவட்ட கலெக்டரின் கண்காணிப்பின் கீழ் பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கடலூர் மாவட்ட கலெக்டர் தலைமையில், கலெக்டர் அலுவலகத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 10.30 மணியளவில் பொதுமக்களின் கருத்துகேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. எனவே பதிவு எல்லைகள் சீரமைத்தல் தொடர்பாக நடைபெறும் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம்.

மேற்கண்ட தகவல் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com