அக்.3-ம் தேதி பொது விடுமுறை - தமிழக அரசு பரிசீலனை

தசரா பண்டிகையை அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மகிழ்வுடன் கொண்டாடுவார்கள் என்று அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
சென்னை,
அக்டோபர் 1ம் தேதி நாளை ஆயுத பூஜை விடுமுறையாகவும், அக்டோபர் 2ம் தேதி விஜய தசமி, அரசு விடுமுறையாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை தினங்கள் நாளை புதன் மற்றும் நாளை மறுநாள் வியாழக்கிழமை வருகின்றன. இதனால் வரும் அக்டோபர் 3ம் தேதி மட்டும் வெள்ளிக்கிழமை மட்டும் வேலை நாளாக இருந்தது
அக்டோபர் 4,5ம் தேதிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து விடுமுறை நாட்களாக உள்ளன. அக்டோபர் 3ம் தேதி ஒருநாளை விடுமுறையாக அரசு அறிவித்தால் 5 நாட்கள் தொடர்ந்து விடுமுறை கிடைக்கும் சூழ்நிலை நிலவியது. தசரா பண்டிகையை அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மகிழ்வுடன் கொண்டாடுவார்கள் என்று அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், அக்.,3ம் தேதி வெள்ளிக்கிழமையை விடுமுறை தினமாக அறிவிக்க தமிழக அரசு பரீலீசனை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அரசு பணியில் இருப்பவர்களுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும். வாரம் முழுவதும் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு இந்த தொடர் விடுமுறையானது சற்று இளைப்பாறலை தந்தாலும், அரசு அலுவலர்களின் இந்த கோரிக்கைக்கு தமிழ்நாடு அரசு செவி சாய்க்கும் என்று அரசு அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அக்டோபர் 3ம் தேதி அரசு பொது விடுமுறை அல்ல என்று தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் அறிவித்துள்ளது.






