ஊராட்சி செயலாளர்கள், ‘பூத் சிலிப்' வினியோகிப்பதை தடுக்க வேண்டும்; தேர்தல் ஆணையருக்கு அ.தி.மு.க. வேண்டுகோள்

அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் பாபுமுருகவேல் மாநில தேர்தல் ஆணையருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:-
ஊராட்சி செயலாளர்கள், ‘பூத் சிலிப்' வினியோகிப்பதை தடுக்க வேண்டும்; தேர்தல் ஆணையருக்கு அ.தி.மு.க. வேண்டுகோள்
Published on

காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு ஊராட்சி செயலாளர்கள் மூலம் பூத் சிலிப் வினியோகிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிப்படி பூத் அலுவலர்கள் மூலம் மட்டுமே பூத் சிலிப் வினியோகிக்கப்பட வேண்டும். எனவே, இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிப்படி பூத் சிலிப் வினியோகிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்டங்களில் சில மாவட்டங்களில் தி.மு.க. பிரமுகர்களின் அறிவுறுத்தலின் பேரில் வேறு மாவட்டத்தைச் சேர்ந்த 10 ஆயிரம் பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இது தேர்தல் விதிகளுக்கு புறம்பானதாகும். புதிதாக சேர்க்கப்பட்டு உள்ள வாக்காளர்களை நீக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பூத் சிலிப் அல்லாமல் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு போன்றவற்றை எடுத்து செல்பவர்களையும் வாக்களிக்க அனுமதிக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com