புதுவையில் நாளை மறுநாள் தவெக பொதுக்கூட்டம்: தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதியில்லை

பொதுமக்களுக்கு பாதுகாப்புக்கு அளிக்கும் வகையில் மருத்துவக் குழுவினர், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்டவை முன்னெச்சரிக்கையாக செய்திருக்க வேண்டும்.
புதுவையில் நாளை மறுநாள் தவெக பொதுக்கூட்டம்: தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதியில்லை
Published on

புதுச்சேரி,

புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் தமிழக வெற்றிக்கழக பொதுக்கூட்டம் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 12 மணிவரை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்துகொண்டு பேச உள்ளார். இதற்காக விஜய், பனையூரில் உள்ள வீட்டில் இருந்து அன்று காலை 8 மணிக்கு கார் மூலம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி வருகிறார். ஹெலிபேடு மைதானத்தில் விஜய் வழக்கமாக பயன்படுத்தும் பிரசார வாகனத்தில் நின்றபடியே பேசுகிறார்.

பொதுக்கூட்டத்திற்கு 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். அவர்களுக்கு கியூ-ஆர்' கோடுடன் கூடிய பாஸ் வழங்க வேண்டும். தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு பாஸ் வழங்கக்கூடாது. அனைவருக்கும் அடிப்படை வசதிகள் குடிநீர், கழிவறை உள்ளிட்டவைகள் இருக்க வேண்டும். பொதுமக்களுக்கு பாதுகாப்புக்கு அளிக்கும் வகையில் மருத்துவக் குழுவினர், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்டவை முன்னெச்சரிக்கையாக செய்திருக்க வேண்டும். முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு பாஸ் வழங்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com