வீட்டு மனைப்பட்டா கேட்டு பொதுமக்கள் மனு

வீட்டு மனைப்பட்டா கேட்டு பொதுமக்கள் மனு கொடுத்தனா.
வீட்டு மனைப்பட்டா கேட்டு பொதுமக்கள் மனு
Published on

பண்ருட்டி அருகே சன்னியாசிப்பேட்டை காமராஜர்நகரை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நாங்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக காமராஜர்நகரில் வசித்து வருகிறோம். அனைவருமே கூலி வேலை செய்து தான் பிழைப்பு நடத்தி வருகிறேம். எங்களுக்கு சொந்தமாக வீடு, மனை ஏதும் கிடையாது. வாடகைக்கு தான் குடியிருந்து வருகிறோம். ஆகவே எங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com