

கடையநல்லூர்:
கடையநல்லூர் அருகே பாம்புகோவில் சந்தையை அடுத்த புன்னைவனம் கிராமத்தில் உள்ள இடத்தில் ஒரு சமுதாயத்துக்கு சொந்தமான பெயர் பலகை வைக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே அந்த இடம் அரசுக்கு சொந்தமானது என்று கூறி, பெயர் பலகையை அகற்றுமாறு வருவாய்த்துறை அதிகாரிகள், அந்த அமைப்பினரிடம் தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் இரவு பெயர் பலகையை அகற்ற விடாமல் அங்கு திரண்டனர். பின்னர் போலீசார் வந்து நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து மக்களே பெயர் பலகையை அகற்றினர்.