பெருங்குடி குப்பை கிடங்கை அகற்றக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

பெருங்குடி குப்பை கிடங்கை அகற்றக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
பெருங்குடி குப்பை கிடங்கை அகற்றக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
Published on

சென்னையை அடுத்த பெருங்குடி குப்பை கிடங்கை அகற்றக்கோரி துரைப்பாக்கம் குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் துரைப்பாக்கம், பெருங்குடி பகுதியை சேர்ந்த பண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், பெருங்குடி குப்பை கிடங்கினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.

கடந்த 50 ஆண்டுகளாக பெருங்குடி குப்பை கிடங்கில் தொழிற்சாலை, மருத்துவம், வீட்டு கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீரும், காற்றும் மாசுபட்டு உள்ளதால் அந்த பகுதிவாசிகள் ஆஸ்துமா, புற்றுநோய் உள்ளிட்ட நோய்களால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். சர்வதேச சுற்றுச்சூழல் விதிகள், திடக்கழிவு மேலாண்மை விதிகளை அரசு முறையாக பின்பற்றவில்லை. பறவைகள் வசிப்பிடமாக விளங்கிய சதுப்பு நிலம் குப்பை கிடங்கால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே குப்பை கிடங்கை முற்றிலுமாக இங்கிருந்து அகற்ற வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com