ஒக்கரைப்பட்டியில் 10-ந்தேதி மக்கள் தொடர்பு முகாம்

ஆண்டிப்பட்டி அருகே ஒக்கரைப்பட்டியில் மக்கள் தொடர்பு முகாம் வருகிற 10-ந்தேதி நடக்கிறது.
ஒக்கரைப்பட்டியில் 10-ந்தேதி மக்கள் தொடர்பு முகாம்
Published on

தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஆண்டிப்பட்டி தாலுகா மொட்டனூத்து வருவாய் கிராமத்துக்கு உட்பட்ட ஒக்கரைப்பட்டி கிராமத்தில் வருகிற 10-ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணி அளவில் மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது. எனவே ஆண்டிப்பட்டி தாலுகாவை சேர்ந்த பொதுமக்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை கொடுத்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com