

மேல்மலையனூர்,
மேல்மலையனூர் தாலுகா வடபாலை கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. முகாமிற்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். எனவே பொதுமக்கள் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவல் கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.