திருவாலந்துறையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்

திருவாலந்துறையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.
திருவாலந்துறையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்
Published on

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள திருவாலந்துறை கிராமத்தில் தமிழக அரசின் மக்கள் தொடர்பு திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கினார். பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன், மாவட்ட வருவாய் அதிகாரி அங்கையர்கண்ணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் வருவாய் துறையின் மூலம் 6 பேருக்கு வீட்டுமனை பட்டா, 38 பேருக்கு குடும்ப அட்டை, 11 பேருக்கு கூட்டுறவு திட்டத்தின் மூலம் பயிர் கடன், 12 பேருக்கு மகளிர் திட்டத்தின் மூலம் சுய உதவிக்குழு கடன், 7 பேருக்கு வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் மின் மோட்டார்கள் என மொத்தம் 195 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 6 லட்சத்து 60 ஆயிரத்து 931 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த முகாமில் பல்வேறு துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com