காஞ்சீபுரம் மாவட்டத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், நெமிலி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்
Published on

முகாமிற்கு மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமை தாங்கினார். மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறுவதையொட்டி கடந்த 1-ந்தேதி முதல் பொதுமக்களிடமிருந்து இலவச வீட்டு மனைப்பட்டா, பட்டா மாற்றம், பட்டா திருத்தம், பட்டா நகல், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை உள்ளிட்ட மனுக்கள் உரிய முறையில் தீர்வு காணப்பட்டு, 377 தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு ரூ.10 கோடியே 36 லட்சத்து 1000 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், உதவி கலெக்டர் (பயிற்சி) சங்கீதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய குழுத்தலைவர் கருணாநிதி, ஸ்ரீபெரும்புதூர் வருவாய் ஆர்.டி.ஓ. சரவணக்கண்ணன், நெமிலி ஊராட்சி மன்றத் தலைவர் அறிவழகன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com