பொதுமக்கள் பண்டிகை காலங்களில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், பொதுமக்கள் பண்டிகை காலங்களில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று முதல் அமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொதுமக்கள் பண்டிகை காலங்களில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி
Published on

சென்னை,

தமிழகத்தில் கொரோன நோய்த்தொற்று படிப்படியாக குறைந்து வருகிறந்து. இந்த சூழலில், நவம்பர் 30 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கவும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், பொதுமக்கள் பண்டிகை காலங்களில் அதிகமாக கூடுவதை தவிர்த்து, விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று முதல் அமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் செல்லும்போதும், பொது இடங்களில், முகக்கவசம் அணிவது, தனிநபர் இடைவெளி கடைபிடிப்பது ஆகியவை கட்டாயம் என குறிப்பிட்டுள்ள முதல்வர் பழனிசாமி, பொதுமக்கள், வீட்டில் இருக்கும்போதும், பணிபுரியும் இடங்களிலும், அடிக்கடி சோப் போட்டு கை கழுவ வேண்டும். அவசியத் தேவை இல்லாமல், வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com