திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல பொதுமக்கள் வரவேண்டாம் - கலெக்டர் அறிவுறுத்தல்

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல பொதுமக்கள் வரவேண்டாம் என்று கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல பொதுமக்கள் வரவேண்டாம் - கலெக்டர் அறிவுறுத்தல்
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலையில் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். இந்த மாதத்திற்கான பவுர்ணமி நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 10.30 மணி முதல் நாளை மறுநாள் (புதன்கிழமை) இரவு 11.30 வரை உள்ளது. பவுர்ணமி சமயத்தில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல வரவேண்டாம்.

பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் இத்தகைய முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று முற்றிலும் இல்லை என்ற நிலையினை அடைய உதவிட வேண்டும்.

இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com