குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியல்

திண்டுக்கல்லில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியல்
Published on

திண்டுக்கல் அங்குவிலாஸ் இறக்கம் அருகே உள்ள பாறைமேட்டுத்தெரு பகுதியில் குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று மாலை அந்த பகுதியில் திரண்டு காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக இல்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com