சென்னையில் பல்வேறு தெருக்களில் சூழ்ந்துள்ள மழை நீரால் பொதுமக்கள் தவிப்பு...!

சென்னையில் பெய்த மழையால் பல்வேறு தெருக்களில் மழை நீர் சூழ்ந்து காணப்படுகிறது.
சென்னையில் பல்வேறு தெருக்களில் சூழ்ந்துள்ள மழை நீரால் பொதுமக்கள் தவிப்பு...!
Published on

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தலைநகர் சென்னை தொடங்கி குமரி வரை பரவலாக மழை கொட்டி வருகிறது. சென்னையை பொறுத்தவரை பெருநகர் மற்றும் புறநகர் பகுதியில் தினமும் காலை தொடங்கி இரவு வரை மழை வெளுத்து வாங்கி வருகிறது.

புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களிலும் விடியவிடிய மழை பெய்து வருகிறது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

சென்னை மாநகர் பொறுத்தவரை முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கைகளை பெருநகர சென்னை மாநகராட்சி மேற்கொண்டாலும் சில இடங்களில் இன்னமும் தண்ணீர் தேங்கி நிற்பதை பார்க்க முடிகிறது. இவற்றை மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த பணிகளை மாநகராட்சி அதிகாரிகளும், ஊழியர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பூந்தமல்லிக்கு உட்பட்ட பல்வேறு தெருக்களில் மழை நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர். மழை நீரை விரைந்து அகற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com