மெரினா கடற்கரையில் இரவு 10 மணிக்குப்பிறகும் பொதுமக்களை அனுமதிக்க வேண்டும் -ஐகோர்ட்டில் வழக்கு

மெரினா கடற்கரையில் இரவு 10 மணிக்குப்பிறகும் பொதுமக்களை அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மெரினா கடற்கரையில் இரவு 10 மணிக்குப்பிறகும் பொதுமக்களை அனுமதிக்க வேண்டும் -ஐகோர்ட்டில் வழக்கு
Published on

சென்னை,

கோடை வெயில் காரணமாக மெரினா கடற்கரையில் இரவு நேரத்தில் ஏராளமானோர் கூடுகின்றனர். ஆனால், இரவு 10 மணிக்கு மேல் கடற்கரையில் இருக்கக்கூடாது எனக்கூறி போலீசார் அங்கிருப்பவர்களை அப்புறப்படுத்துகின்றனர். கடைகள், ஓட்டல்கள் 24 மணிநேரமும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று நட்சத்திர விடுதிகளில் இரவு நேரங்களில் மது பரிமாறவும் அனுமதி உள்ளது. அதேவேளையில் மெரினா கடற்கரைக்கு வரும் மக்களுக்கு மட்டும் நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

துன்புறுத்தக்கூடாது

எனவே, மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்களை இரவு 10 மணிக்கு மேல் அனுமதிக்க உத்தரவிடவேண்டும். மேலும் இரவு 10 மணிக்கு மேல் அவர்களை வெளியேறும்படி துன்புறுத்தக்கூடாது என போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் புகழேந்தி, லட்சுமி நாராயணன் ஆகியோர் உத்தரவிட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com