நாகர்கோவில்-மும்பை ரெயிலுக்கு பொதுமக்கள் வரவேற்பு

நாங்குநேரியில் நின்று சென்ற நாகர்கோவில்-மும்பை ரெயிலுக்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.
நாகர்கோவில்-மும்பை ரெயிலுக்கு பொதுமக்கள் வரவேற்பு
Published on

இட்டமொழி:

நாகர்கோவிலில் இருந்து ரேணுகுண்டா வழியாக மும்பைக்கு வாரம் இருமுறை செல்லும் பாலாஜி எக்ஸ்பிரஸ் ரயில் நாங்குநேரியில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்வதற்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்ற ரெயில்வே துறை, நாங்குநேரியில் அந்த ரெயிலை நின்று செல்ல உத்தரவிட்டது.

அதன்படி நேற்று காலையில் நாகர்கோவிலில் இருந்து மும்பை சென்ற ரெயில், நாங்குநேரி ரெயில் நிலையத்தில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி சென்றது. அந்த ரெயிலுக்கு அனைத்து கட்சியினா, பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். ரெயில் பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com