புத்தகத் திருவிழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் திடீர் ஆய்வு

புத்தகத் திருவிழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் திடீர் ஆய்வு நடத்தினார்.
புத்தகத் திருவிழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் திடீர் ஆய்வு
Published on

புத்தகத் திருவிழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் திடீர் ஆய்வு நடத்தினார்.

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், பொதுநூலக இயக்கம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் திருவண்ணாமலை பழைய பைபாஸ் சாலையில் உள்ள காந்தி நகர் மைதானத்தில் கடந்த 9-ந் தேதி புத்தக திருவிழா தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் 100 புத்தகக்கடைகளுடன் கூடிய புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. வருகிற 19-ந் தேதி (புதன்கிழமை) வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தபக திருவிழா நடக்கிறது.

புத்தக திருவிழாவினை முன்னிட்டு அங்கு அமைக்கப்பட்டு உள்ள அரங்கில் தினமும் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளர், பேச்சாளர், சிந்தனையாளர்களின் சொற்பொழிவுகள் நாள் தோறும் நடைபெற்று வருகின்றன. மேலும் அங்கு குழந்தைகளுக்கான விளையாட்டுகள், உணவுக் கூடங்கள், அரசு துறை அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு தினமும் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொது மக்கள் வந்து புத்தகங்களை வாங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் புத்தகத் திருவிழாவை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திடீரென நேரில் சென்று ஒவ்வொரு அரங்கமாக பார்வையிட்டு அங்கு புத்தகங்கள் மற்றும் புத்தக விற்பனை குறித்து ஆய்வு செய்தார். மேலும் பல்வேறு புத்தகங்களை வாங்கினார்.

அப்போது மாநில தடகள சங்க துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்.பி., முன்னாள் நகரமன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் ப.கார்த்திவேல்மாறன், தி.மு.க. மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம் உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com