தமிழகத்தில் திரையரங்குகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

தமிழகத்தில் திரையரங்குகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் திரையரங்குகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
Published on

சென்னை,

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அன்று முதல் தமிழகத்தில் தியேட்டர்களை திறக்க அனுமதி அளிக்கப்படாமல் இருந்து வந்தது. இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளானார்கள்.

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்ட போதும், தியேட்டர்களை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால், தியேட்டர் உரிமையாளர்கள் தியேட்டர்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். ஒரு கட்டத்தில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினர்.

இந்த நிலையில், கடந்த அக்டோபர் 31-ந் தேதி பல்வேறு தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு வருகிற 10-ந் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க அனுமதி அளித்தது. தியேட்டர்களை திறக்க அனுமதி அளித்தது தியேட்டர் உரிமையாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் தியேட்டர்களை சுத்தப்படுத்தும் பணி தொடங்கி உள்ளது. இருக்கைகளை சுத்தம் செய்தல், பழுதான இருக்கைகளை மாற்றுவது, சுவர்களுக்கு வர்ணம் பூசுதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்தில் திரையரங்கு திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:-

* திடையரங்குகளில் 50% இருக்கைகளில் மட்டுமே பொதுமக்கள் அமர்ந்து படம் பார்க்க அணுமதி.

* திரையரங்க வளாகத்திற்குள் அனைவரும் முக கவசம் அணிந்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் மற்றும் தெர்மல் பரிசோதனை கட்டாயம்.

* காட்சி நேரங்களுக்கு இடையே போதுமான இடைவெளி அளிக்க வேண்டும்.

* ஒவ்வொரு காட்சி முடிந்த பின்னும் திரையரங்கு மற்றும் வளாகம் முழுவதும் கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்த வேண்டும்.

* கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் திரையரங்குகளை திறக்க அனுமதி இல்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com