முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான ‘ஹால் டிக்கெட்' வெளியீடு

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான கணினி வழித்தேர்வுக்கு ‘ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் நிலை-1, கணினி பயிற்றுனர்கள் நிலை-1-ல் இருக்கும் 2020-21 காலிப்பணியிடங்களுக்கான கணினி வழித்தேர்வு வருகிற 12-ந்தேதி முதல் 15-ந்தேதி வரையிலும், 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரையிலும் என 2 அட்டவணைகளில் நடக்க இருக்கிறது.

இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் (நுழைவுச்சீட்டு) www.trb.tn.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வுக்கூட நுழைவு சீட்டினை பிரிண்ட் அவுட் எடுத்து தேர்வு மையத்திற்கு எடுத்து செல்வதோடு, அதனுடன் அசல் அடையாள அட்டை, விண்ணப்பிக்கும் போது பதிவேற்றம் செய்த புகைப்படத்தின் அசல் பிரதியையும் கொண்டு செல்ல வேண்டும். ஹால்டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள அறிவுரைகளை தேர்வர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

ஹால் டிக்கெட் 2 கட்டங்களாக வெளியிடப்படும். முதலில் மாவட்ட அளவில் ஹால்டிக்கெட்டும், அதனைத்தொடர்ந்து தேர்வுக்கு 3 நாட்களுக்கு முன்பு தேர்வு மைய ஹால்டிக்கெட்டும் வெளியிடப்பட இருக்கிறது. அதற்கான முழு விவரங்கள் www.trb.tn.nic.in என்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.

மேற்கண்ட தகவல் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com