தொடக்கக் கல்வி பட்டய தேர்வு முடிவு வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடக்கக் கல்வி பட்டய தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
தொடக்கக் கல்வி பட்டய தேர்வு முடிவு வெளியீடு
Published on

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடக்கக் கல்வி பட்டய தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

தொடக்கக் கல்வி பட்டய தேர்விற்கு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி பெற்று முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு தேர்வு எழுதிய மாணவ- மாணவிகளின் தேர்வு முடிவுகள் அவரவர் பயின்ற ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் வெளியிடப்பட்டுள்ளது. தனித் தேர்வர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் இன்று (புதன்கிழமை) மாலை 3 மணி முதல் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

விடைத்தாள்களின் நகல், மறு கூட்டல் செய்ய விண்ணப்பிக்க விரும்புவோர் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தினைப்பதிவிறக்கம் செய்து கொண்டு, அதனைப் பூர்த்தி செய்து, விண்ணப்பத்துடன் அதற்கான கட்டணத்துடன் 3-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ராணிப்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com