திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி தரிசனம்

கோவில் நிர்வாகம் சார்பில் புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருக்கடையூர்,
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு மூலவராக அமிர்தகடேஸ்வரரும், உற்சவராக காலசம்ஹார மூர்த்தியும் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். பல்வேறு சிறப்பு வாய்ந்த இந்த கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி வருகை தந்தார்.
முன்னதாக கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் கோவிலில் விநாயகர், அமிர்தகடேஸ்வரர், காலசம்ஹார மூர்த்தி, அபிராமி அம்மன் உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
Related Tags :
Next Story






