புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் வெட்டிக்கொலை

வெடிகுண்டு வீசியதால் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடிய முன்னாள் கவுன்சிலரை மர்ம நபர்கள் விரட்டிச் சென்று வெட்டிக் கொன்றனர்.
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் வெட்டிக்கொலை
Published on

புதுச்சேரி,

புதுச்சேரியில் உள்ள பிள்ளையார்குப்பம் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் கவுன்சிலர் சாம்பசிவம் (வயது 35) இன்று காலை திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது கிருமாம்பாக்கம் அரசு பள்ளி அருகே அவரது காரின் மீது அடையாளம் தெரியாத மர்மநபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இதிலிருந்து தப்பிய சாம்பசிவம், காரில் இருந்து இறங்கி தப்பி ஓடினார்.

தப்பி ஓட முயன்ற அவரை விரட்டிச் சென்ற அவர்கள், சாம்பசிவத்தை கொடூரமாக வெட்டி கொலை செய்தனர். இதன் பின்னர் அவர்கள் அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றனர்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதற்குள் அந்த இடத்தை காங்கிரஸ் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com