"புதுச்சேரி வாக்காளர் பெருமக்களே.." - த.வெ.க. தலைவர் விஜய் பரபரப்பு பதிவு

புதுச்சேரியில் இன்று சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
"புதுச்சேரி வாக்காளர் பெருமக்களே.." - த.வெ.க. தலைவர் விஜய் பரபரப்பு பதிவு
Published on

சென்னை,

தமிழகம், மேற்குவங்கம், அசாம், கேரளம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றிக்கு கடந்த மாதம் 15-ந் தேதி தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அவற்றில் அசாம், கேரளம், புதுச்சேரியில் இன்று (வியாழக்கிழமை) தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் பா.ஜனதா கூட்டணிக்கும்,காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதுதவிர நாம் தமிழர் கட்சி, த.வெ.க. -நேயம் மக்கள் கழகம் கூட்டணியும் களத்தில் உள்ளன. இதனால் புதுச்சேரியில் 4 முனை போட்டி நிலவுகிறது. இங்கு மொத்தம் 294 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியுள்ளதாவது:-

புதுச்சேரி வாக்காளர் பெருமக்களே, இன்னும் சில மணிநேரங்களே உள்ள இத்தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவுறப்போகும் கடைசி மணித்துளி வரை விழிப்புடன் இருந்து உங்கள் வாக்குகளைப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com