புதுக்கோட்டை: பெண் போலீஸ் வீட்டில் 30 பவுன் நகைகள் கொள்ளை

கேமரா பதிவுகளை வைத்து மர்ம பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை: பெண் போலீஸ் வீட்டில் 30 பவுன் நகைகள் கொள்ளை
Published on

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை கம்பன் நகரை சேர்ந்தவர் கலைராஜன். இவர் புதுக்கோட்டை பழைய பஸ் நிலையத்தில் கம்ப்யூட்டர் சென்டர் வைத்துள்ளார். இவரது மனைவி அபர்ணா. இவர் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். வழக்கம்போல் கலைராஜன் தனது கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்று விட்டார்.அவரது மனைவியும் காலையிலேயே போலீஸ் நிலையத்திற்கு சென்று விட்டார்.

இவர்களது வீட்டில் கலைராஜனின் தாயார் தமிழ்ச்செல்வி (வயது 65) மட்டும் இருந்துள்ளார். இந்நிலையில் தமிழ்ச்செல்வி முன்பக்க கதவை சாத்திவிட்டு பின் பகுதியில் துணிகளை துவைத்துக் கொண்டு இருந்தார்.அப்போது வீட்டின் முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்று பீரோவில் வைத்திருந்த 30 பவுன் தங்க நகைகளை மர்மநபர் எடுத்துக்கொண்டு வெளியே சென்றுள்ளார். இதுகுறித்து டவுன் போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து மர்ம பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com