புதுக்கோட்டை: தொழிற்சாலையில் தீ விபத்து - பல லட்சம் மதிப்பிலான தென்னை நார் எரிந்து நாசம்


புதுக்கோட்டை: தொழிற்சாலையில் தீ விபத்து - பல லட்சம் மதிப்பிலான தென்னை நார் எரிந்து நாசம்
x

ஊழியரிகள் வெல்டிங் பணியில் ஈடுபட்டபோது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் தென்னை நார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று ஊழியர்கள் வெல்டிங் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டு தொழிற்சாலை முழுவதும் தீ பரவியது.

இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்து ஆலங்குடி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தென்னை நார் எரிந்து நாசமானது. அதோடு சேர்ந்து தொழிற்சாலையில் இருந்த இயந்திரங்களும் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன.

1 More update

Next Story